ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடைக்கால வரவு செலவுத்திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதிநிதிகளை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும். அரச ஊழியர்கள் காத்திரமான சேவையை நாட்டுக்கு வழங்க வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன்போது 22ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment