பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்.
அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பாடாசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, வட மாகாண அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை அடுத்த வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வட மாகாண பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 8ஆம் திகதி முதல் வாரத்தின் ஐந்து நாட்களும் திறக்கப்படவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment