காட்டு பகுதியில் துப்பாக்கியுடன் நடமாடிய நபர் அதிரடிக் கைது.
திருகோணமலை - கோமரங்கடவல காட்டு பகுதியில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோமரங்கடவல - கஜுவத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இன்று மாலையளவில் அவரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment