Header Ads

test

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட இணக்கம்.

 ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா(Bumio Kishida), ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியதுடன், ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு ஆவலாக உள்ளதாகத் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதாகவும் ஜப்பான் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மற்றும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என நம்புவதாகவும் ஜப்பானிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


No comments