Header Ads

test

கிளிநொச்சியில் நகைக்கடை வியாபாரி ஒருவருக்கு நள்ளிரவில் நேர்ந்த துயரம்.

     கிளிநொச்சியில் நகைக்கடை வியாபாரி ஒருவர் வேலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்த போது வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கடத்தி சென்றதுடன், கடையை திறக்க வைத்து 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் நகைக்கடை வைத்திருக்கும் குறித்த நபர், வியாபார நடவடிக்கைகளை முடித்து நேற்று இரவு வீடு சென்றுகொண்டிருந்தார்.

இதன் போது பன்னங்கண்டி பகுதியில் வைத்து வானில் வந்தவர்களால் வழிமறிக்கப்பட்டு கடத்தப்பட்டதுடன், நீண்ட நேரம் வானில் வைத்து உரிமையாளரை அவர்கள் தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் நகைக்கடைக்கு அழைத்து சென்று கடையை திறக்குமாறு மிரட்டி அங்கிருந்து 10 பவுண் தங்க நகைகளை எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், காயங்களுக்கு உள்ளான நபரை அங்கேயே விட்டு சென்ற நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் உறவினர்களின் உதவியுடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


No comments