முல்லைத்தீவிலுள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்.
முல்லைத்தீவு நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஹோட்டலில் பணியாற்றி வரும் அக்கரைப்பற்றினைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரை கடந்த 4ஆம் திகதி முதல் காணவில்லை என முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (05) காலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.
Post a Comment