குடும்பஸ்தர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டிக்கொலை.
குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் கண்டி - கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மூன்று பிள்ளைகளின் தந்தையே வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment