Header Ads

test

கிளிநொச்சியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசி நடவடிக்கை.

 கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கோவிட்-19 தடுப்பூசி ஏற்றப்படுகிறது என மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்ற கோவிட்-19 தொற்று காரணமாக மேற்படி இரு தினங்களிலும் காலை 8 மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத பொது மக்கள் மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.


No comments