எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட மரநடுகை திட்டம்.
எதிர்கால சந்ததியினரின் தேவை கருதி பிரதேசங்கள் தோறும் மரநடுகை செயற்றிட்டத்தை வன்னி தமிழ் மக்கள் ஒன்றிய அமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.தற்போது குறித்த அமைப்பினர் பாடசாலைகள் தோறும் தமது மரநடுகை செயல்பாட்டை துரிதமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
10.08.2022 அன்று சிறப்பு மிக்க பசுமை செயற்றிட்டம் ஒன்றை வன்னி தமிழ் மக்கள் ஒன்றிய அமைப்பினர் முன்னெடுத்துள்ளனர்.
அமரர் திரு குமாரசாமி அவர்களின் நினைவாக கிளிநொச்சி திருவையாறு மகாவித்தியாலய பாடசாலை வளாகத்தில் பயன்தரும் 300 மரக்கன்றுகள் நாட்டப்பட்ன.
குறித்த நிகழ்வை சிறந்த முறையில் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒழுங்குபடுத்தியிருந்ததுடன்,குறித்த அமைப்பினருக்கு பாடசாலை சமூகத்தினர் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
Post a Comment