கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்.
வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை பொது விடுமுறையாக இருப்பதால், ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமை மாத்திரம் பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வௌ்ளிக்கிழமை வீட்டிலிருந்து கற்பதற்கான செயற்பாடுகளை வழங்கியோ அல்லது இணைய வழி கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கவோ முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், போக்குவரத்து பிரச்சினை இல்லாத பாடசாலைகளில் மாத்திரம் அதிபர், ஆசிரியர்களின் இணக்கப்பாட்டுடன், வலயக் கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன், வௌ்ளிக்கிழமைகளிலும் பாடசாலைகளை திறக்க முடியும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Post a Comment