Header Ads

test

ஜனாதிபதி ரணிலின் வீட்டுக்கு தீ வைத்தமை தொடர்பில் மூவர் கைது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் புலனாய்வு பிரிவினரால் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தலை மற்றும் நாராஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் (01) இரவு இக் கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 பேரில் பிரதான சந்தேக நபரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநர்கள் 18, 22 வயதுகளுடைய மடபாத்த மற்றும் கொழும்பு 05 (நாராஹேன்பிட்டி) பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, 5ஆவது ஒழுங்கையில் உள்ள, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு கடந்த ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தீ வைக்கப்பட்டிருந்தது.

 இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்களை அனுப்புமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


No comments