அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்.
அரசாங்க ஊழியர்களை இன்று முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திறைசேறிக்கான செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டிருந்த எரிபொருள் தட்டுபாடு காரணமாக அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபம் கடந்த ஜுன் மாதம் 17ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில்,தற்போது எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு திரும்பும் எனவும் அரசாங்க ஊழியர்களை வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment