காலிமுகத்திடலில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை.
கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியிலுள்ள ஆர்ப்பாடக்களத்தில் மீண்டும் இன்றைய தினம் குழப்பநிலையொன்று பதிவாகியுள்ளது.
கொழும்பு கோட்டை பொலிஸார் சற்றுமுன் அப்பகுதிக்கு வந்து, குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கூடாரங்கள் நாளை பிற்பகல் ஐந்து மணிக்கு முன்னதாக அகற்றப்பட வேண்டும் என்ற அறிவித்தலை மீண்டும் வாசித்துக் காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்ட நிலையில் அங்கு குழப்ப நிலையொன்று ஏற்பட்டிருந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காலிமுகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தங்கியுள்ள அனைவரையும் நாளை மாலை 5 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு கோட்டை பொலிஸ் நிலையம் நேற்றைய தினம் அறிவித்திருந்தது.
மேலும் அந்த பகுதிகளில் உள்ள அரசாங்க அல்லது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டுமானம் மற்றும் பயிர்ச்செய்கைகளை உடனடியாக அகற்றுமாறும் போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் நேற்றைய தினம் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே போராட்டக்கள பகுதிக்கு இன்றைய தினம் சென்றிருந்த பொலிஸார் குறித்த அறிவிப்பை மீண்டும் வாசித்துக் காட்டியுள்ளனர்.
Post a Comment