Header Ads

test

வவுனியாவில் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்த்தர்.

  வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் அதே இடத்தை சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் யோன்சன் எனும் குடுபஸ்தரே மரணமடைந்துள்ளார். ஆயுதம் தாங்கிய குழு ஒன்று தாக்கியதில் பலத்த காயமடைந்து, ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிதம்பரபுரம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர். இதனையடுத்து சடலம் சட்டவைத்தியரின் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments