Header Ads

test

கிளிநொச்சி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் பெறுமதியான பொருட்கள் திருட்டு.

 கிளிநொச்சி - ஊற்றுப்புலம் பாடசாலை உடைக்கப்பட்டு அங்கிருந்த பல பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் அலுவலகத்தின் கூரை பிரிக்கப்பட்டு, அலுவலகத்திற்குள் இறங்கிய திருடர்கள் அங்கிருந்த 6 மடிக்கணினிகள், மின்விசிறி ஒன்று, புகைப்பட கருவி ஒன்று, மேசை கணினி ஒன்று உள்ளிட பல பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி  பாடசாலையில் கொள்ளையிட்ட திருடர்கள் | Thieves In Kilinochchi Who Don T Even Skip School

இது தொடர்பில் பாடசாலை அதிபர் வலயக் கல்வித் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதோடு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


கிளிநொச்சி  பாடசாலையில் கொள்ளையிட்ட திருடர்கள் | Thieves In Kilinochchi Who Don T Even Skip School

No comments