Header Ads

test

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.

 சமையல் எரிவாயுவின் விலை இன்றைய தினத்திற்கு பின்னர் குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினத்திற்கு பின்னர் எரிவாயு விலை நிச்சயம் குறையும். அந்த விடயத்தை நான் பொறுப்புடன் கூறிக் கொள்கிறேன்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலை சூத்திரத்திற்கமைய, இந்த எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது.

எங்களிடம் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு உள்ளது. ஒகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்கள் வரை நாட்டிற்கு வரும் கப்பல்கள் தொடர்பில் திட்டமிடப்பட்டுள்ளன.

கொள்வனவு செய்யப்பட்டவைகள் அனைத்தும் விநியோகிக்கப்படும். இனிமேல் ஒரு போது எரிவாயு வரிசைகள் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments