Header Ads

test

வடக்கில் அகற்றப்பட்ட அபாயகரமான வெடி பொருட்கள்.

 முல்லைத்தீவு - அம்பகாமம், தச்சடம்பன் மற்றும் கிளிநொச்சி - முகமாலை, ஆனையிறவு ஆகிய பிரதேசங்களில் அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் நிறுவனம் நேற்று அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஸார்ப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது ஈடுபட்டு வருகின்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முல்லைதீவு மாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் இதுவரை 2135156 சதுரமீற்றர் பரப்பளவில் 33825 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும் அம்பகாமம் பகுதியிலும் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






No comments