பாடசாலை மாணவன் மீது தாக்குதல் நடாத்திய ஆசிரியை கைது - அதிபர் தலைமறைவு.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலையொன்றில் ஐந்தாம் ஆண்டு மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனை தாக்கிய பாடசாலை அதிபர் தலைமறைவாகியுள்ளதாகவும் உடந்தையாக இருந்த ஆசிரியையொருவர் நேற்று(11) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஏ.றஹீம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாணவன் பாடசாலையின் மேல் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான மாணவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் ஆசிரியை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் அதிபர் தொடர்ந்தும் தேடப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை காத்தான்குடி பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment