Header Ads

test

இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலால் காதை பறிகொடுத்த நபர்.

 வவுனியா, வீரபுரம், சின்னத்தம்பனை பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் காதை கடித்து குதறியமையினால் படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் நேற்று (04) இரவு 7.30 மணியளவில் வீதியில் சென்ற சமயத்தில் இரு தரப்பினருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்தர்க்கம் மோதலாக மாறியதில் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,குறித்த குழிவிலுள்ள இளைஞன் மோதலில் ஈடுபட்ட நபர் ஒருவரின் காதை கடித்து துண்டாக்கியுள்ளார்.

மேலும், தலையில் வாள்வெட்டு காயம் மற்றும் காது துண்டாக்கப்பட்ட நிலையில் 45 வயதுடைய நபரொருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments