Header Ads

test

நாட்டின் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்.

 சர்வகட்சி அரசாங்கத்திற்கான அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் பங்குபற்றிய அனைத்து கட்சிகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் முன்மொழிவுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, போராட்டத்தின் உண்மையான மக்களின் எதிர்பார்ப்பை வென்றெடுப்பதற்கு, அதன் மோசமான அம்சங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணிலின் முக்கிய அறிவிப்பு! | President Ranil S Important Announcement

சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான பிரேரணை தொடர்பில் தென்னிலங்கையின் பிரதம சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட மக்கள் பேரவையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீளக் கொண்டுவருவது மற்றும் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சில கட்சிகளுடன் மாத்திரமே இன்னும் கலந்துரையாடல்கள் உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments