கடலலையில் இழுத்துச் செல்லப்பட்ட இரு யுவதிகள்.
திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்றவேளை கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு யுவதிகள், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தாரோடு சுற்றுலா வந்த அனுராதபுரம் சியம்பலகஹாகம பிரதேசத்தைச் சேர்ந்த இந்த யுவதிகளே கடலில் நீராடும் போது அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது இருவரும் சுமார் 150 மீற்றர் தூரம் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட அவர்கள் இருவரையும் பொலிசாரும் கடற்படையின் கரையோரப் பாதுகாப்பு பிரிவினரும் மீட்டுள்ளனர்.
கரைக்குக் கொண்டு வந்து இரு யுவதிகளுக்கும் முதலுதவி அளித்து குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்துள்ளனர் . இந்நிலையில் யுவதிகள் கடலில் அடித்து செல்லப்பட்டமை அங்கிருந்தவர்களை பதறவைத்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் ஆறுதலை அளித்துள்ளது.
Post a Comment