கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் நாடு திரும்புவதற்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து வெடித்த மக்கள் போராட்டத்தால் முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்
அதேவேளை நாளை ஆதாவது ஆகஸ்ட் 24 ஆம் திகதி கோட்டாபய நாடு திரும்புவார் என கூறப்பட்டிருந்த போதும் அவரது பயணம் பிற்போடப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
மேலும் இலங்கை வரவுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிடம் பசில் ராஜபக்ச கோரிக்க விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் கோட்டாபயவிடம் தொலைபேசி வாயிலாக உரையாடியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment