நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் பலி.
கம்பஹாவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அழகு கலை நிலையமொன்றில் இருந்த போது அங்கு வந்த துப்பாக்கிதாரி துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சம்பவத்தில் கம்பஹா - உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment