வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்து 2000 நாட்களை எட்டியுள்ள இன்றைய தினத்தில் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்த குறித்த போராட்டம் வடக்கு மாகாணம் தழுவி கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இக் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.
இப் பேரணியானது ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி டிப்போ சந்திவரை சென்று ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதுடன் அவர்களுக்குரிய நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும், இனப் படுகொலையை மேற்கொண்டவர்களை கைது செய்ய கோரியும், இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment