காணித் தகராறு காரணமாக மகனை அடித்துக் கொலை செய்த தந்தை.
காலி - பிட்டிகல பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறி தந்தையால் மகன் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.
சம்பவத்தில் 62 வயதுடைய தந்தையால் தாக்கப்பட்டு 40 வயதுடைய மகன் உயிரிழந்துள்ளார்.
காணி விவகாரம் தொடர்பில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பல நாட்களாக ஏற்பட்டு வந்த வாக்குவாதமே இந்தக் கொலைக்கான காரணம் என்று பிட்டிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் மேலதிக விசாரணைகளை பிட்டிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment