உலகளாவிய ரீதியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த இலங்கை.
உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது.
உலக வங்கியின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, உலகிலேயே அதிக உணவு விலை பணவீக்கத்துடன் லெபனான், ஜிம்பாப்வே, வெனிசுலா மற்றும் துர்கியே ஆகிய நாடுகளையடுத்து இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது.
அதேசமயம் உலக வங்கியின் சமீபத்திய உணவுப் பாதுகாப்புப் புதுப்பிப்பின் படி, உள்நாட்டு உணவுப் பணவீக்கம் உலகெங்கிலும் அதிகமாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏறக்குறைய அனைத்து குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளிலும் உயர் பணவீக்கம் தொடர்கிறதுடன் அதிக பணவீக்கத்துடன் கூடிய உயர் வருமான நாடுகளின் பங்கு கடுமையாக அதிகரித்து வருகிறதாகவும் கூறப்படுகின்றது.
Post a Comment