லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு.
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் குறைக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.
உலக சந்தையில் நிலவும் எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு Litro Lp Gas Prices எரிபொருள் விலையில் திருத்தம் இதேவேளை ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
அதன்படி ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, எரிபொருளின் விலை 50 முதல் 100 ரூபா வரை குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment