பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.
நாட்டில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை 20% குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நாட்டிலுள்ள பெரும்பாலான உணவகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.
இந்நிலையில் எரிவாயு விநியோகமும் உரியமுறையில் விநியோகிக்கப்படும் நிலையில் உணவகங்களை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை எரிபொருள், மற்றும் எரிவாயு விலைகள் குறக்கப்படலாம் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment