12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று முதல் குறைப்பு.
லங்கா சதொச ஊடாக சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது.
லங்கா சதொச நிறுவனத்தின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று (செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் சீனி, அரிசி, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளைப்பூடு ஆகிய பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னி சம்பா அரசி ஒரு கிலோ 21 ரூபா குறைக்கப்பட்டு 194 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு கிலோ பருப்பு 25 ரூபா குறைக்கப்பட்டு 460 ரூபாவுக்கும், ஒரு கிலோ நெத்தலி 25 ரூபா குறைக்கப்பட்டு 1375 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும் ஒரு கிலோ நாட்டரிசி 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு 198 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. சிவப்பு சீனியும் 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு 310 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
Post a Comment