Header Ads

test

வவுனியாவில் வீதிப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்.

   வவுனியாவில் 04 இலட்சம் ரூபாய் பணத்துடன் குடும்பஸ்தர் ஒருவர், இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார் என சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, சிதம்பரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு, அங்கிருந்த 04 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகரால் சிதம்பரபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா குடும்பஸ்தரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்! | Vavuniya Family S Face Shattering Actஇதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், சிதம்பரபுரம் பகுதியில் வீதிப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், திருடப்பட்ட 04 இலட்சம் ரூபாய் பணமும் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட நிலையில், மேலதிக விசாரணையின் பின் குறித்த நபரை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சிதம்பரபுரம் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments