பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்.
இலங்கையில் அடுத்த வாரமும் பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு சற்றுமுன் வெளியானது.
அதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள விடுமுறை நீடிக்கப்படுவதுடன், எதிர்வரும் ஜூலை மாதம் 18ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீளவும் ஆரம்பித்து நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.
இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
Post a Comment