எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவாகிய மற்றுமொரு மரணம்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொரளை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் கொத்தட்டுவ பகுதியைச் சேர்ந்த 66 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருள் வரிசையில் பல்வேறு மோசடிச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் வீடுகள் மற்றும் பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் இருந்து எரிபொருளை களவாடிச் செல்லும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.
Post a Comment