ஊரடங்கை நீக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள்.
நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தற்போதைய பொலிஸ் ஊரடங்கை நீக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுமக்களின் கருத்து சுதந்திரம், எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான சுதந்திரம் போன்றவற்றை நசுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் தன்னிச்சையான முறையில் ஊரடங்கு உததரவைப் பிறப்பிக்க பொலிஸாருககு அதிகாரம் இல்லாத நிலையில் தங்கள் அதிகாரத்தை மீறி பொலிஸார் செயற்படுவதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த மார்ச் மாதமும் இவ்வாறான முறைகேடான வழியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர் ரத்துச் செய்யப்பட்டமை குறித்தும் மனித உரிமைமகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment