Header Ads

test

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன்.

 இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன்(Sarah Hulton), ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரித்தானிய தூதுவர் ரணிலுடன் பரந்த கலந்துரையாடலை நடத்தினார்.

பொருளாதார மீட்சி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அரச தலைவர் அவருக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணிலை திடீரென சந்தித்த பிரித்தானிய தூதுவர்! | The British Ambassador Met President Ranil

மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் ஐ.நா மனித உரிமைகளுக்கு இணங்க உரிய நடைமுறை உட்பட பல பகுதிகள் குறித்து இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தியுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க குறிப்பிட்டதுடன், உயர்ஸ்தானிகர் இது தொடர்பில் தனது பூரண ஆதரவை வழங்குவதாக அவர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments