ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சுக்கு முதலாவது விஜயம்
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றதன் பின்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றுள்ளார்.
இதன்போது, நாட்டின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்து சுருக்கமான கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.
Post a Comment