Header Ads

test

யாழில் இறந்த நிலையில் காரை ஒதுங்கிய அதிகளவான மீன்கள்.

 யாழ்ப்பாணம் தொண்டைமனாறு கடல் நீர் ஏரியில் இறந்த நிலையில் அதிகளவான மீன்கள் கரை ஒதுங்கி உள்ளன.

இவ்வாறு மீன்கள் கரை ஒதுங்கியதற்கான காரணம் அறியவராத நிலையில்,ஏரியின் நீர் மட்டம் குறைந்து உப்பின் செறிவு அதிகரித்ததன் விளைவாக இவ்வாறு மீன்கள் இறந்திருக்கலாம் என நம்பபடுகிறது.  

குறித்த மீன்களை கருவாட்டு தேவைகளுக்காக சில மீனவர்கள் எடுத்து செல்வதனையும் அவதானிக்க முடிந்தது.

எனினும் மீன்கள் ஏன் இறந்தன என்பது தொடர்பில் பரிசோதிப்பதற்கு மாவட்ட செயலகத்தின் நீரியல் வள அதிகாரிகள் வருகை தருவதாக தெரிவித்தபோதும் அவர்கள் இதுவரையும் குறித்த பகுதிக்கு வரவில்லை என கூறப்படுகின்றது.





No comments