யாழில் இரு சகோதரர்கள் இராணுவ புலனாய்வாளர்களால் கைது.
யாழ்.கொடிகாமம் நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வு பிரிவினால் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சகோதரர்களிடமிருந்து 210 மில்லிக்கிராம் நிறை கொண்ட மூன்று சிறிய ஹெரோயின் பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கொடிகாமம் கச்சாய் வீதிப் பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 24 வயதுடைய சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment