Header Ads

test

நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் பலர் உயிரிழப்பு.

நாட்டில் நேற்றையதினம் கொரோனா தொற்று காரணமாக மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களுள் 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்று ஆண்கள், ஒரு பெண் உட்பட நான்கு பேருமாக ஐவர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு இன்று 29.07.2022) வரை கொரோனா தொற்றால் மொத்தமாக 665379 பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் இது வரை 665522 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments