இராணுவ சிப்பாய் ஒருவர் மீது சரமாரியான கத்திக் குத்து.
எம்பிலிபிட்டிய-இரத்தினபுரி வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பாதுகாப்புக் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வந்த சிலர், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது இராணுவ சிப்பாய் அதனை தடுக்க முயன்றுள்ளார்.
இந்நிலையில் அதனைத் தடுக்க முற்பட்ட போது, அவர்களில் ஓர் இராணுவ சிப்பாயை கத்தியால் குத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பிச் சென்ற நிலையில் அவர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Post a Comment