Header Ads

test

விசேட அதிரடிப்படையினரால் பெண்ணொருவர் கைது.

 20 கிராம் ஹெரோயின் மற்றும் பெருந்தொகை பணத்துடன் பெண் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொரலஸ்கமுவ, பெபிலியான பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண்ணிடம் இருந்து நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மற்றும் 21 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரால் பெண் ஒருவர் அதிரடியாக கைது! | A Woman Was Arrested By The Special Task Force

விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சம்பவத்தில் 33 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபராக குறித்த பெண் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments