வவுனியா மாவட்டத்தில் எரிபொருள் வழங்குவதை சீராக்க கோரி அரசாங்க அதிபரிடம் மனு கையளிப்பு.
வவுனியா மாவட்டத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட நாட்களாக வீதிகளில் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றமை தொடர்பில் அரசாங்க அதிபருக்கு கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து மக்கள் அமைப்பு என்ற ரீதியில் அரசாங்க அதிபரிடம் கடிதமொன்றினை இன்று கையளித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள், முச்சக்கரவண்டி சாரதிகள், பேருந்து உரிமையாளர்கள், வர்த்தக சங்கத்தினர் ஊடகவியலாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி கையளிக்கப்பட்ட குறிப்பிட்ட கடிதத்தில் வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் உட்பட அனைத்து துறையினருக்கும் எரிபொருளை வழங்க சீரான நடைமுறையினை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளனர்.
இதன் பிரகாரம் நாளை இவ்விடயம் தொடர்பாக அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment