Header Ads

test

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ள பொலிஸ் அதிகாரி.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆதரவு வழங்கியுள்ளார்.

மகரமவில் இருந்து காலி முகத்திடல் நோக்கி செல்லும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்லும் மக்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் குறித்த பொலிஸ் அதிகாரி செயற்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் அதிகாரி தனது பொலிஸ் இலட்சினை பொறித்த தலைக்கவசத்தை தூக்கி எறிந்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் வெற்றியளிக்க வேண்டும் என கூச்சலிட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

எதிர்ப்பு வெளியிட்டு வரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் இந்த பொலிஸ் அதிகாரியின் ஆதரவு மக்களின் ஆர்ப்பாட்டத்தினை வலுப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த பொலிஸ் அதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments