மண்ணெண்ணெயின் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.
மண்ணெண்ணெயின் விலைகள் விரைவில் கட்டாயம் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி சட்டத்தின் உத்தரவுகள் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மண்ணெண்ணெய் தற்போது 87 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 420 ரூபா செலவாகின்றது.
எரிபொருளை சரியாக விநியோகிக்க வேண்டுமாயின் அதில் நஷ்டம் ஏற்படக்கூடாது. கூட்டுத்தாபனம் இதுவரை குறைந்த விலையில் மண்ணெண்ணெயை வழங்கி வந்தது.
இதனை தொடர்ந்தும் செய்ய முடியாது. மண்ணெண்ணெய் விலையை அதிகரித்தால், மீனவர்கள் மீது அரசாங்கம் தாக்குதல் தொடுக்கின்றது என்று குற்றம் சுமத்துவார்கள். மறுபுறம் அவர்கள் எரிபொருளை தருமாறு கோரி கோஷமிடுகின்றனர்
எரிபொருளை தொடர்ந்தும் வழங்க வேண்டுமாயின் நஷ்டமின்றி அதனை விற்பனை செய்ய வேண்டும்.
கடனை திரும்ப செலுத்த எமக்கு நிவாரண காலம் தற்போது கிடைக்காது. கடனை உடனடியாக திரும்ப செலுத்த வேண்டும். டொலர்களை போலவே ரூபாவை சேகரிப்பதுதற்போது பிரச்சினையாக உள்ளது.
இதன் காரணமாகவே பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கடன் வரையறை அதிகரிக்குமாறு யோசனை முன்வைக்கப்படுகிறது. பிரதமரும் அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார் என காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
Post a Comment