மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை
மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யபட்டுள்ளார்.
மட்டக்களப்பு - சந்திவெளி பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையே நேற்று(07) இரவு இடம்பெற்ற சண்டை காரணமாகவே குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் 17 வயது மகன் மற்றும் 3 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்திவெளி கலலூர் வீதி பாலைத்தேனாவை சேர்ந்த 38 வயதுடைய கந்தசாமி இளையராஜா என்பவரே இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சந்திவெளி வைத்தியசாலைக்கு அருகில் பிரதான வீதியிலுள்ள உயிரிழந்தவரின் மனைவியின் தாயார் வீட்டில் நேற்றிரவு 8.30 மணியளவில் கணவன் மனைவி இருவருக்கிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
முரண்பாடானது சண்டையாக உருவாகியதையடுத்து மனைவியின் உறவினர்கள் குறித்த நபரை கத்தியால் வெட்டியுள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைத்து விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
Post a Comment