Header Ads

test

மர்மமான முறையில் உயிரிழந்த வெளிநாட்டு பெண்.

 காலியில் வீடொன்றில் வசித்து வந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, உயிரிழந்தவர் 60 வயதுடையவர் எனவும் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஜேர்மனிக்கு சென்று பின்னர் தனது வீட்டில் வசிப்பதற்காக நாடு திரும்பியவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அவர் ஜேர்மனிக்கு விஜயம் செய்து பதினைந்து நாட்களுக்கு முன்னர் தான் நாடு திரும்பியுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நேற்று (20) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments