Header Ads

test

ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றிய பொது மக்கள் - பிரதமர் அவசர கூட்டத்திற்கு அழைப்பு.

 பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக இவ்வாறு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இன்றைய தினம் காலை முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கொழும்பை வந்தடைந்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று பிற்பகலளவில் ஜனாதிபதி மாளிகை முன்பாக ஒன்று திரண்ட மக்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.

அத்துடன் தற்போது ஜனாதிபதி செயலகத்தையும் மக்கள் கைப்பற்றி உள் நுழைந்துள்ளனர். 

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே பிரதமர் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன மக்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments