கிளிநொச்சியில் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தால் வழங்கப்பட்ட ஒரு தொகுதி மரவள்ளித் தடிகள்.
வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தினூடாக கிளிநொச்சி பஸ் தரிப்பு நிலையத்தின் முன்பாக நேற்றைய தினம் (04) மரவள்ளித் தடிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் முகமாகவும் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு சுவிடன் நாட்டில் வசித்துவரும் தரன் சிறி அவர்கள் தனது சொந்த நிதியில், வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் அமைப்பின் ஊடாக மரவள்ளித் தடிகள் கிளிநொச்சி வாழ் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதனை அடுத்து எதிர்வரும் தினங்களில் புத்தூர் மேற்கு கலைமதி கிராம விவசாயிகளுக்கு பசளை உரங்கள் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஊடாக வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செயற்பாட்டை பலரும் பாராட்டி வருவதோடு,இதில் பயன் பெற்ற மக்கள் தயது நன்றிகளையும் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
Post a Comment