Header Ads

test

திருடப் போன இடத்தில் நல்லவராக மாறிய திருடன்.

 மோட்டார் சைக்கிளொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - 01, சீனிப்போடியார் வீதியிலுள்ள வீடொன்றிலே இச்சம்பவம் நேற்று (5) காலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டு முன்றலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்த பெட்ரோலை ஒருவர் திருடும் போது வெளிச்சத்தை ஏற்படுத்த லைட்டரை பயன்படுத்தியுள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிள் தீப்பற்றியுள்ளதுடன், வீட்டின் கூரை மற்றும் கதவு, ஜன்னல்களும் தீப்பற்றி எரிந்துள்ளன.

மோட்டார் சைக்கிள் தீப்பற்றிய போது அதனை திருடன் அனைப்பதற்காக தண்ணீர் என்று நினைத்து வாளியொன்றிலிருந்த பெயின்ட் பூசும் டின்னரை மோட்டார் சைக்கிளில் ஊற்றிய போது மோட்டார் சைக்கிள் வேகமாக தீப்பற்றியுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு தீப்பற்றிய போது மோட்டார் 'சைக்கிள் எரிகிறது எழும்புங்கள்' என்று கூக்குரல் ஒன்று கேட்டவுடன் தாம் எழுந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாதக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments