கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி விரையும் அதிசொகுசு கார்கள்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி அதிசொகுசு கார்கள் சில விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகங்களுக்குள் பொதுமக்கள் உள்நுழைந்துள்ளனர்.
இந்த நிலையில் போராட்டங்கள் ஆரம்பித்து ஒரு சில மணி நேரத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி அதிசொகுசு வாகனங்கள் சென்றுள்ளன.
எனினும், அதில் சென்றவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
Post a Comment