சற்று முன்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் கைது.
கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள் தற்போது பொலிஸ் பேருந்தில் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெளியில் வருமாறு கோசமிட்டு அவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் சில பெண்கள் உட்பட பலர் இந்த போராட்டத்தில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment